உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்

திருநகர்: மதுரை விளாச்சேரியில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பூமி நீளா வெங்கடேச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மார்ச் 7ல் துவங்கிய யாகசாலை பூஜை நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு, கோ பூஜை முடிந்து கோயில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.மூலவர்கள், உற்ஸவர்களுக்கு மகா அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயில் ஸ்தானிகர் சேவர் கொடியோன் சிவாச்சாரியார், விளாச்சேரி கருப்புசாமி சிவம் தலைமையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஸ்தானிகர் ராஜா சிவாச்சாரியார் முன்னிலையில் குலாலகுல சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை நடத்தினர். கோயில் நிர்வாகிகள் குணசேகரன், ஆறுமுகம், ராமலிங்கம், மாயாண்டி வேளார் வகையறா நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்தனர்.அலங்காநல்லுார்:பெரிய இலந்தைக்குளத்தில் நல்லதங்காள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.மார்ச் 8ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 2ம் காலயாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.அம்மன், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை