உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொடிமரம், நந்திக்கு கும்பாபிஷேகம்

கொடிமரம், நந்திக்கு கும்பாபிஷேகம்

சோழவந்தான் : திருவேடகம் ஏலவார் குழலி ஏடகநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம், நந்தி சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.பழமையான இக்கோயிலில் அம்மன், சுவாமிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இவற்றில் அம்மன் சன்னதி முன்பு கொடிமரம் இல்லை. எனவே ஆகம விதிப்படி கொடிமரம் கடந்த பிப்.,22ல் வைக்கப்பட்டது. தற்போது உபயதாரர் மூலம் கொடிமரத்தை தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட நந்தி சிலைக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பட்டர் அசோக் கும்பாபிஷேகம், சிறப்பு பூஜைகளை செய்தார். அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி கோயில் உட்பிரகாரத்தில் ஆடி வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை