உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்கம்

தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்கம்

பெருங்குடி : தமிழக அரசின் தமிழ்ப் புதல்வன் திட்ட துவக்க விழா சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் நடந்தது.முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி வில்லாபுரம் கிளை மேலாளர் கார்த்திகேயன், மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கை துவக்கினார். சமூகத்துறை தொழில்நுட்ப அலுவலர் சவுந்தர்யா, முத்துலட்சுமி பேசினர். ஏற்பாடுகளை நோடல் அதிகாரி விஜயகுமார் செய்திருந்தார்.முகாமில் யு.எம்.ஐ. எஸ், ஆதார் அப்டேட் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மீடியம் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்ட நோக்கம் குறித்தும் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ