| ADDED : ஜூலை 29, 2024 07:06 AM
அவனியாபுரம் : வாடிக்கையாளர் சேவையின் அடிப்படையில், மதுரை விமான நிலையம் நாட்டின் 4வது சிறந்த உள்நாட்டு விமான நிலையமாகத் தரம் பெற்றுள்ளதாக,சிறந்த பன்னாட்டு விமான நிலையத்திற்காக நடத்திய ஆய்வில் இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், கொழும்பு, ஐதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.இந்த கணக்கெடுப்பு ஜனவரி முதல் ஜூன் வரையிலும் மற்றும் ஜூன் முதல் டிசம்பர் வரையிலும் வாடிக்கையாளரின் திருப்தி கணக்கெடுப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடத்தப்படுகிறது. 61 விமான நிலையங்களில் 2024 ஜனவரி முதல் ஜூன் வரை இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பின் ஒரு அங்கமாக, உள்நாட்டு விமானங்களை இயக்கும் விமான நிலையங்களில் பயணிகளிடம் கருத்து சேகரிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து விசாரிக்கப்படுகிறது. இந்த முறை 30 க்கும் மேற்பட்ட அளவுருக்கள், பார்க்கிங் வசதிகள், பேக்கேஜ் கோர்ட்கள்/ டிராலிகள் கிடைப்பது, பணியாளர்களின் நடத்தை, துாய்மை, சாப்பாட்டு வசதிகள், விமானத் தகவல்திரைகள், பாதுகாப்பு சோதனைகளின் போது காத்திருக்கும் நேரம், முனையத்திற்குள் நடந்து செல்லும் துாரம் போன்றவற்றை உள்ளடக்கிய 30க்கும் மேற்பட்ட அளவுருக்கள் பின்னுாட்டத்தில் சிறந்த பன்னாட்டு விமான நிலையம் என்ற அங்கீகாரம் இந்திய விமான நிலையம் ஆணையம் மூலமாக வழங்கப்படும்.இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்த வார தொடக்கத்தில் இந்திய விமான நிலைய ஆணையம் முடிவுகளை அறிவித்தது. இதில் ராஜமுந்திரி விமான நிலையம் (ஆந்திரா) முதல் இடத்தையும், காகல் விமான நிலையம் (இமாச்சலப் பிரதேசம்) இரண்டாவது இடத்தையும் லே விமான நிலையம் மூன்றாவது இடத்தையும், மதுரை விமான நிலையம்நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.