மதுரை விமான நிலையத்திற்கு ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகள் வருகை
அவனியாபுரம்; மதுரை விமான நிலையத்திற்கு ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகள் வருகை தருவதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 20க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் வருகின்றனர். மதுரையில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டில்லி, ஐதராபாத் ஆகிய உள்நாட்டு விமான சேவைகளும், கொழும்பு, துபாய், சிங்கப்பூருக்கு வெளிநாட்டு சேவையும் இயங்குகின்றன.இந்நிலையில் இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மதுரை விமான நிலையம் தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்த விமான நிலையத்திற்கு வாரத்திற்கு 140 விமானங்கள் வந்து செல்வதாகவும், ஒரு மணி நேரத்தில் 700 பயணிகளை இது கையாள்வதாகவும், ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகள் இதன் மூலம் பயணம் செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.