உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ரோடு பணி அதிகாரிகள் ஆய்வு

மதுரை ரோடு பணி அதிகாரிகள் ஆய்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டம் மூலம் பல பகுதிகளில் ரோடு பணிகள் நடந்துள்ளன. இப்பணிகளை ஆண்டுக்கு ஒருமுறை பிறமாவட்ட நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகள் துறை ரீதியாக தணிக்கை செய்வது வழக்கம்.மதுரையில் நடந்த பணிகள் குறித்து சேலம் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர் செல்வம் தலைமையில் செக்கானுாரணி, செம்பியனேந்தல் உட்பட பல பகுதிகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். சேலம் கோட்டப்பொறியாளர் துரை, மதுரை நபார்டு, கிராமச்சாலைகள் கோட்டப் பொறியாளர் சந்திரசேகரன், உதவி பொறியாளர் குட்டியான் உட்பட பலர் பங்கேற்றனர். இக்குழுவினர் ரோட்டின் தடிமன், பயன்படுத்திய பொருட்களின் தரம், பணிகளின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை