உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் மார்ச் 5 கொடியேற்றம்

குன்றத்தில் மார்ச் 5 கொடியேற்றம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவிழா நடைபெறும் மார்ச் 20வரை காலையில் தங்கப் பல்லக்கு, இரவு தங்கமயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை உட்பட தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வருவர். முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 11ல் கைப்பார நிகழ்ச்சி, நக்கீரர் லீலை, மார்ச் 12ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மார்ச் 16ல் சூரசம்ஹார லீலை, மார்ச் 17ல் பச்சை குதிரை ஓட்டம், பட்டாபிஷேகம், மார்ச் 18ல் சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம், மார்ச் 19ல் தேரோட்டம், மார்ச் 20ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி