உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மார்க்சிஸ்ட் மாநாடு

மார்க்சிஸ்ட் மாநாடு

மேலுார், : மேலவளவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு நடந்தது. தாலுகா செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் மணவாளன் முன்னிலை வகித்தனர். புதிதாக கட்டியுள்ள தண்ணீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், ரேஷன் கடையில் பொருட்கள் மாதம் முழுவதும் கிடைக்கவும், மயானத்திற்கு பாதை வசதி தேவை எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி