உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா விற்ற ம.தி.மு.க., நிர்வாகி மகன்

கஞ்சா விற்ற ம.தி.மு.க., நிர்வாகி மகன்

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கஞ்சா விற்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரை எழிலரசனை 24, போலீசார் கைது செய்தனர். இவரது தந்தை தீனதயாளன், அப்பகுதி ம.தி.மு.க., துணைத் தலைவராக இருந்தார். பிரபல ரவுடி சபா தரப்பைச் சேர்ந்த எழிலரசனுக்கு சிறையில் பழக்கமான மதுரை கல்மேடு தவமுருகன், ராமநாதபுரம் மாவட்டம் மாறன்குளம் முத்துபாண்டி ஆகியோர் ஒடிசா சரத் மூலம் அம்மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்று வந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்து 2 கிலோ கஞ்சாவை மதுவிலக்குப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை