உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருந்துகள் இல்லாமல் முடங்கிய மக்களை தேடி மருத்துவ திட்டம்; குமுறும் நோயாளிகள்

மருந்துகள் இல்லாமல் முடங்கிய மக்களை தேடி மருத்துவ திட்டம்; குமுறும் நோயாளிகள்

மேலுார் : திருவாதவூர் ஆரம்ப சுகாதார நிலைய பகுதி கிராமங்களில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மருந்துகள் இல்லாததால் நோயின் தீவிரம் அதிகரித்துள்ளது.இங்கு திருவாதவூர், ஆட்டுக்குளம், பதினெட்டாங்குடி உள்ளிட்ட கிராமத்தினர் சிகிச்சை பெறுகின்றனர். சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகம் உள்ளிட்ட 5 வகை பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்படுகின்றனர். அவர்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் அவரவர் வீடுகளுக்கு சென்று செவிலியர்களால் மருந்துகள் வழங்கப்படும். ஆனால் சில மாதங்களாக வழங்கவில்லை.பயனாளிகள் கூறியதாவது: ஆட்டுக்குளம், திருவாதவூர் பகுதிகளில் இரண்டு மாதங்களாக மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மருந்துகள் வழங்கவில்லை. இதில் பதிவு செய்தவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை தரக்கூடாது என்ற விதி உள்ளதாக அத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். சுகாதார நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நாள் கணக்கில் காத்து கிடக்கிறோம். எனவே, மக்களை தேடி மருத்துவ திட்டம் முடங்கிவிடாமல் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.சுகாதார இணை இயக்குநர் குமரகுருபரன் கூறுகையில், இந்த வாரம் முதல் மருந்துகள் வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை