உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊராட்சி அலுவலகம் இல்லாத மேலக்கோட்டை

ஊராட்சி அலுவலகம் இல்லாத மேலக்கோட்டை

திருமங்கல : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மேலக்கோட்டை ஊராட்சி அலுவலகம் பழுதடைந்ததால் 6 மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. போதிய நிதி இல்லாததால் இதுவரை கட்டுமான பணி துவங்கவில்லை. அங்கன்வாடி மையமும் இடிக்கப்பட்டு கட்டப்படவில்லை.ஊராட்சி அலுவலகம் தற்காலிகமாக மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்தில் இயங்குவதால், மகளிர் குழுவினர் சிரமப்படுகின்றனர். 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் பயன்பாடின்றி உள்ளது. வைகை கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் முழுமையாக வராத நிலையில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை