உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலுார் போக்குவரத்து போலீசிற்கே போக்கு காட்டும் வாகன ஓட்டிகள்

மேலுார் போக்குவரத்து போலீசிற்கே போக்கு காட்டும் வாகன ஓட்டிகள்

மேலுார் : மேலுாரில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் முன்பு வெளியாட்கள் டூவீலரை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.மேலுார் தாலுகா அலுவலக வளாகத்தினுள் நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், கருவூலம் மற்றும் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. அதனால் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இங்கு போக்குவரத்து போலீஸ் அலுவலகம் முன்பு வெளியாட்கள் பலரும் டூவீலரை நிறுத்துவதால் போலீசார், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.சமூக ஆர்வலர் ஸ்டாலின் கூறியதாவது: வெளியூர் செல்வோர் பலர் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் முன்பு டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர். நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளை அழைத்து வருவதில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. டூவீலர்களை ஒழுங்கு முறையின்றி குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துவதால் அவசர நேரத்தில் தீயணைப்பு வண்டிகள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. தீயணைப்பு வீரர்கள் இறங்கி டூவீலர்களை ஒழுங்குப்படுத்தி செல்ல வேண்டியுள்ளது. கருவூலத்திற்கு வரும் முதியோர் ஆட்டோவில்கூட உள்ளே வர முடியவில்லை. போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய போலீஸ் அலுவலகம் முன்பே வாகன இடையூறை தவிர்க்க முடியாமல் தவிக்கின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி