உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / என்.சி.சி., சான்றிதழ் தேர்வு

என்.சி.சி., சான்றிதழ் தேர்வு

திருப்பரங்குன்றம், : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் என்.சி.சி., 'பி' சான்றிதழ் தேர்வு நடந்தது.மதுரை, கோவை, பழநி, பெரியகுளம், கிருஷ்ணன் கோவில், சாத்துார், விருதுநகரில் இருந்து 41 கல்லுாரிகளைச் சேர்ந்த 656 என்.சி.சி., வீரர்கள், 170 நேவி வீரர்கள் பங்கேற்றனர்.கர்னல் சமந்த் தலைமையில், மதுரை குரூப் கமாண்டர் கர்னல் வினய் குமார் சவுகான் மேற்பார்வையில் 30 ராணுவ அதிகாரிகள் தேர்வை நடத்தினர். முதல் நாள் செய்முறை தேர்வில் நடைப்பயிற்சி, வரைபட ஆய்வு, துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடந்தது. நேற்று எழுத்து தேர்வு நடந்தது. மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா, என்.சி.சி., அலுவலர் சுரேஷ்பாபு ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ