மேலும் செய்திகள்
குடிநீர் கேட்டு முற்றுகை
20-Jul-2026
கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஒன்றியம் தென்னமநல்லுார் ஊராட்சி முனியாண்டி புரத்தில் 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் முறையாக நடக்கவில்லை. எனவே அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. எனவே நேற்று நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஒன்றிய அலுவலர்கள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றதால் கலைந்து சென்றனர்.
20-Jul-2026