| ADDED : மே 28, 2024 03:28 AM
மதுரை, : தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் ராமன் நேற்று மதுரை வடக்கு தாலுகாவில் ஆய்வு நடத்தினார்.வருவாய்த் துறையில் ஆன்லைனில் சான்றிதழ்கள் விண்ணப்பம், பட்டா மாறுதல் மனுக்கள், நிலம், உதவித்தொகை தொடர்பான விண்ணப்பங்கள் எந்தளவு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள மனுக்கள் எத்தனை, காரணம் உட்பட பலவும் ஆய்வு செய்யப்பட்டன. வருவாய்த்துறை மனுக்களுக்கு தீர்வு காண அரசு மாவட்டம் தோறும் இதுபோல அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்துகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் அவர் வடக்கு தாலுகாவை தேர்வு செய்து ஆய்வு நடத்தினார். அவருடன் கலெக்டர் சங்கீதா, டி.ஆர்.ஓ., சக்திவேல், தாசில்தார்கள் உடனிருந்தனர். ஆய்வையொட்டி அனைத்து ஊழியர்களும் காலை 8:30 மணிக்கே அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.