உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெயின்டர் கொலை முகம் எரிப்பு

பெயின்டர் கொலை முகம் எரிப்பு

அலங்காநல்லுார்: மதுரை கோவில்பாப்பாகுடி சின்ன கண்மாய் தெரு கருப்பண்ணன் மகன் நாகமுத்து 35; பெயின்டர். இவரது மது பழக்கத்தால் மனைவி, மகனை பிரிந்து வாழ்ந்து வந்தார். நேற்று இரவு வீட்டருகே சிலருடன் மது அருந்தியுள்ளார். போதையில் இருந்த நாகமுத்துவை வெட்டிக் கொலை செய்தவர்கள் அவரது டூவீலரில் இருந்த பெட்ரோலை பிடித்து அவரின் முகத்தை எரித்து சென்றுள்ளனர். சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ், அலங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி