உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தனிச்சியம் பிரிவில் தவிக்கும் பயணிகள்

தனிச்சியம் பிரிவில் தவிக்கும் பயணிகள்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை தனிச்சியம் பிரிவில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடக்கிறது. இதனால் சர்வீஸ் ரோட்டின் இரு புறங்களிலும் இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் நிழற்குடை இன்றி பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காலையில் துவங்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடிக்கிறது. இப்பகுதி கிராமப்புறங்களில் இருந்து மதுரை, வாடிப்பட்டி செல்ல வரும் கூலித் தொழிலாளர்கள், மருத்துவமனைக்கு, கல்லுாரி செல்பவர்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். அப்பகுதியில் நிழல் தேடி சற்றுத் தள்ளி நின்றால் பஸ்சை தவறவிடவும், அவசரமாக ஓடிவரும்போது தவறி விழும் நிலையும் உள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் தற்காலிக நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை