உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின் திருட்டுக்கு அபராதம்

மின் திருட்டுக்கு அபராதம்

மதுரை : தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக மதுரைக் கோட்ட அமலாக்க அதிகாரிகள் திண்டுக்கல், உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்தில், பழநி, விருப்பாச்சி, உடுமலை, சத்திரப்பட்டி, ஆயக்குடி, குமாரலிங்கம், நிலக்கோட்டை, நுாத்துலாபுரம், ஊத்துப்பட்டி, கயத்தாறு, ஒட்டநத்தம், மைலாடி, சுரண்டை, கடையநல்லுார் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 23 வீடுகளில் மின் திருட்டை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு ரூ.19 லட்சத்து 26 ஆயிரத்து 794 ஐ அபராதமாக விதித்தனர்.சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் சமரசத் தொகையாக ரூ.ஒரு லட்சத்து 11 ஆயிரம் செலுத்தினர். இதனால் அவர்கள் மீது புகார் எதுவும் பதிவு செய்யவில்லை. பொதுமக்கள் மின்திருட்டு குறித்து 94430 37508 ல் தெரிவிக்கலாம் என மதுரை செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை