உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்கு அச்சத்தில் மக்கள்

காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்கு அச்சத்தில் மக்கள்

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி மந்தையில் ஹைமாஸ் விளக்கு எரியாததால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது.கருங்காலக்குடியில் 2,500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு மத்தியில் மைதானம், கோயில் உள்ளது. இம் மந்தையில் ஆறு வருடங்களுக்கு முன் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.போதிய பராமரிப்பு இல்லாமல் விளக்குகள் பழுடைந்ததால், இரவு கும் இருட்டாக உள்ளது. வெளியில் வர அச்சப்படும் மக்கள், வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது : மந்தையில் விநாயகர், சந்திவீரன் கோயில் உள்ளது. இன்று அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டிய பெண்கள் 20 நாட்கள் கும்மி கொட்டுவது வழக்கம். போதுமான வெளிச்சம் இல்லாததால் மக்கள் செய்வதறியாது திகைக்கிறோம்.வெளிச்சம் இல்லாததை பயன்படுத்தி அருகே உள்ள பேட்டையில் செயின் பறிப்பு உட்பட குற்ற சம்பவங்கள் நடப்பது போல் மந்தையிலும் வெளிநபர் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதனால் இரவில் வெளியே நடமாட முடியாமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.ஊராட்சித் தலைவர் முதல் ஒன்றிய அதிகாரிகள் வரை மனு கொடுத்தும்நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் ஹைமாஸ் விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.பொறியாளர் கணேசன் கூறுகையில், உடனடியாக ஹைமாஸ் விளக்கு சரி செய்யப்படும்என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி