மேலும் செய்திகள்
13 கிலோ கஞ்சா பறிமுதல் 4 வாலிபர்கள் அதிரடி கைது
13-Aug-2024
கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைதுபாலமேடு: போலீசாருக்கு வலையப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., அண்ணாதுரை, போலீசார் முரளிகிருஷ்ணன், கதிரேசன், ராஜா முகமது வி.புதுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதி தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த தனபாண்டியை 32, கைது செய்தனர். ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.விபத்தில் ஒருவர் பலிதிருமங்கலம்: ஆலம்பட்டியை சேர்ந்த ஆக்டிங் டிரைவர் இளையராஜா 35, இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் மேலக்கோட்டை விலக்கில் ஆலம்பட்டி நோக்கி டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். அந்த வழியாக வந்த டவுன் பஸ் மீது மோதியதில் தலையில் காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.--45 பேரிடம் விசாரணைமேலுார்: தெற்குத்தெருவில் ஆயி அம்மன் கோயில் வீடு பராமரிப்பு பணி செய்வதற்காக பூமி பூஜை செய்வது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சரவணக்குமார் மற்றும் தமிழ்மாறனுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. நேற்று இரு தரப்பினரும் ஆயுதங்களுடன் மோதி கொண்டதில் 10 பேர் காயமடைந்தனர். மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலுார் எஸ்.ஐ. ஆனந்த ஜோதி இருதரப்பை சேர்ந்த 45 பேரிடம் விசாரிக்கிறார்.
13-Aug-2024