உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இறந்த எஸ்.ஐ.,க்கு போலீசார் மரியாதை

இறந்த எஸ்.ஐ.,க்கு போலீசார் மரியாதை

திருமங்கலம் : திருமங்கலம் அருகே பி.அம்மாபட்டி ராமகிருஷ்ணன் மகன் கார்த்திகேயன் 38. இவர் தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத்துறையில் போலீஸ் எஸ்.ஐ., பணியாற்றி வந்தார். மனைவி வனிதா. ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. நான்கு நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக கார்த்திகேயன் அம்மாபட்டிக்கு வந்தார்.மீண்டும் துாத்துக்குடிக்கு டூவீலரில் செல்லும் வழியில் விபத்தில் இறந்தார். அவரது உடல் நேற்று அம்மாபட்டியில் போலீசாரின் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. விருதுநகர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை