போலீஸ்காரர் தற்கொலை
மதுரை: மதுரை ஆறாவது பட்டாலியன் படையைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி 31. விவாகரத்து ஆனவர். தந்தை இறந்த நிலையில் தாயாருடன் பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று மாலை 6:00 மணிக்கு தாயாரை வாக்கிங் சென்று வரும்படி கூறிய, ஈஸ்வரமூர்த்தி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.