| ADDED : ஜூன் 25, 2024 06:23 AM
உசிலம்பட்டி : கள்ளர் சீரமைப்புத்துறை, ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பரிந்துரைத்த அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டியில் பா.பி., உள்ளிட்ட கள்ளர் அமைப்புகள் ஒன்றிணைந்து அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், பாரதிய பா.பி., முருகன்ஜி, தென்னிந்திய பா.பி., திருமாறன், தமிழ் தேசிய பா.பி., சங்கிலி, நேதாஜி சேனை மகாராஜன், மூ.மு.க., வேலுச்சாமி, ஆதிதிராவிடர் அமைப்பின் தமிழ்முதல்வன், மருது சேனை, அனைத்து கள்ளர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.