உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தனிநபர் பிரச்னைக்கு பொதுநல வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

தனிநபர் பிரச்னைக்கு பொதுநல வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: மதுரை மாவட்டம் மேலுார் அருகே தனியாமங்கலம் தர்மலிங்கம். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தனியாமங்கலம் தென்பள்ளம் தென்தென்கரை தெரு வார்டு 3ல் பொதுப்பாதையை ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். அகற்றக்கோரி கலெக்டர், மேலுார் ஆர்.டி.ஓ., தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள அந்த இடம் வருவாய்த்துறை பதிவேடுகளில் ரயத்வாரி புஞ்சை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் பெயரில் பட்டா உள்ளது. பாதை மீது ஏதேனும் மனுதாரருக்கு உரிமை இருந்தால் சிவில் நீதிமன்றத்தில் தீர்வு காணலாம். தனிநபர்களிடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காண இதுபோல் பொதுநல வழக்கு வடிவில் தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ