உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெருங்குடியில் சர்வே இன்றி கட்டப்படும் மழைநீர் கால்வாய்

பெருங்குடியில் சர்வே இன்றி கட்டப்படும் மழைநீர் கால்வாய்

மதுரை : மதுரை பெருங்குடியில் இருந்து நிலையூர் செல்லும் ரோட்டில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரோடு நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இதில் உள்ளாட்சி அமைப்பு சார்பில் நடத்தும் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டியது அவசியம்.முறையான 'சர்வே' (அளவீடு) இன்றி கட்டப்படும் இக்கால்வாய் குறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிய வந்ததும் திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 500 மீ., கால்வாயில் 200 மீட்டர் கட்டியபின் பணிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கனவே இருந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வாய்மொழியாக அளித்த உத்தரவை அடுத்து பணிகள் நடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''வருங்காலத்தில் ரோட்டை விரிவுபடுத்தும் தேவை ஏற்பட்டால், இருபுறமும் நெடுஞ்சாலைத் துறையே மழைநீர் கால்வாய் அமைக்கும். இந்நிலையில் இப்பணிகளால் இடையூறு ஏற்படும். எனவே எங்களிடம் தெரிவித்து இருந்தால் அதற்கேற்ப அளவீடு பணி நடந்து முறையாக கட்டுமானத்தை துவக்கி இருக்கலாம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ