உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிராந்திய டேக்வாண்டோ போட்டி

பிராந்திய டேக்வாண்டோ போட்டி

மதுரை : கருப்பாயூரணி லட்சுமி பள்ளியில் சி.ஐ.எஸ்.சி.இ., பள்ளிகளுக்கு இடையிலான பிராந்திய டேக்வாண்டோ போட்டிகள் நடந்தன.தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 30 பள்ளிகளின் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். மதுரை கெஸ்விக் பள்ளி முதல்வர் ஹெலன் அமுதா துவக்கி வைத்தார். சர்வதேச நடுவர்கள் பரத், நாகராஜ் போட்டிகளை நடத்தினர்.போட்டி முடிவுகள்ஆடவர் 14 வயது பிரிவில் மதுரை லட்சுமி பள்ளி, மகளிர் பிரிவில் வேலுார் சிக் ஷா க்ரீன் வுட்ஸ் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றன. 17 வயது ஆடவர் பிரிவில் சிக் ஷா க்ரீன் வுட்ஸ் பள்ளி, மகளிர் பிரிவில் கோத்தகிரி இன்டர்நேஷனல் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றன.19 வயது ஆடவர் பிரிவில் சிக் ஷா க்ரீன் வுட்ஸ் பள்ளி, ஆரல்வாய்மொழி கோமாரின் இன்டர்நேஷனல் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றன. லட்சுமி பள்ளி முதல்வர் சுபாஷினி, உடற்கல்வி ஆசிரியை ஜேனெட் மெர்லின் மாணவர்களை பாராட்டினர். வெற்றி பெற்றவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை