உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.4000 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

ரூ.4000 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

மதுரை : வணிகவரித்துறையில் இந்தாண்டு ரூ. 4000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.மதுரையில் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. அமைச்சர், எம்.பி., வெங்கடேசன் துவக்கி வைத்தனர். 134 மாணவர்களுக்கு ரூ.17.94 கோடி கல்விக் கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது.அமைச்சர் கூறியதாவது: வரி ஏய்ப்பு செய்பவர்களின் முழு விவரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சர்வே மூலம் தொழில்வரி ஏய்ப்புசெய்பவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. சான்றிதழ் மட்டும்வைத்துக்கொண்டு தொழில் செய்வதாக கூறும் போலியானவர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.வணிகவரித்துறையில் ரூ. 1,42,000 கோடி, பதிவுத்துறைக்கு ரூ.23,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு ரூ.4000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நியாயமாக தொழில் செய்ய வேண்டும்.மக்கள் செலுத்தும் ஜி.எஸ்.டி.,யை அரசுக்கு நேர்மையான முறையில் செலுத்த வேண்டும். தொழில் கடனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை