உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவியரின் சலங்கை பூஜை

மாணவியரின் சலங்கை பூஜை

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் ராமச்சந்திரா நாட்டியாலயா நாட்டிய பயிற்சி பள்ளி சார்பில் சலங்கை பூஜை விழா நடந்தது.பேரூராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணவேணி, ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லுாரி பரதநாட்டிய ஆசிரியர் காயத்ரி தேவி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். குட்லாடம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் கதிரவன் முன்னிலை வகித்தார். பள்ளி நிறுவனர் முத்துமாலா வரவேற்றார். மாணவிகள் தமிழினி, விபிஷி, அருணா, பூர்ணிகா, நவஸ்ரீ சுபா, திவ்ய ஹரிணி, மிஸ்கா, திவ்ய பிரபா, நிவேதினி, தானியவர்ஷினி, சகானா சாய், சாய் சாதனா ஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி நிர்வாகி கோபிக்குமார் ஒருங்கிணைத்தார். மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி