உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மதுரை : மதுரை ஒத்தக்கடை தேத்தான்குளம் இந்திரா நகரில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. பவுண்டேஷன் ஆலோசகர் தென்னவன் தலைமை வகித்தார். பிரபு முன்னிலை வகித்தார். உறுப்பினர் பாலமுருகன் வரவேற்றார். சமூக ஆர்வலர் கண்ணனுக்கு பவுண்டேஷன் சார்பில் 'நெல் ஜெயராமன்' விருது வழங்கப்பட்டது. மரங்களின் அவசியம், காலநிலை மாற்றம் குறித்து அவர் பேசினார். அரசு, வேம்பு, மந்தாரை, புங்கை மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவி அபிநயா நன்றி கூறினார். ஆலோசகர் ராகேஷ் தொகுத்து வழங்கினார். சிலம்பம் மாஸ்டர் பாண்டி, சிறப்பு பள்ளித் தலைமை ஆசிரியர் ஆரியமாலா, தாளாளர் கணேசன், ஆசிரியர்கள் பூவேந்தின், ஸ்டெல்லா மேரி, சியாமளா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை