உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிருதுமால் நதி கால்வாயை காப்பாத்துங்க...

கிருதுமால் நதி கால்வாயை காப்பாத்துங்க...

மதுரை: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் 73 கண்மாய்களை நிரப்பி அம்மாவட்ட மக்களின் நீராதாரமாக இருக்க உதவுவது கிருதுமால் நதி கால்வாய். நாகமலையில் துவங்கி அங்கேயே சாக்கடையாக மாறி பயணிக்கிறது. இக்கால்வாய் ரூ. 7.35 கோடியில் சீரமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இக்கால்வாயின் முக்கிய பிரச்னையே அதில் கலக்கும் கழிவுநீரும் ஆக்கிரமிப்புகளும்தான். நகரின் பல இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. மதுரை இயற்கை பண்பாட்டு பேரவை உறுப்பினர் தமிழ்தாசன் கூறியதாவது: கிருதுமால் நதி கால்வாயின் அழிவுக்கான காரணங்களை சீர்செய்யாமல் அதனை மீட்க முடியாது. இதை மேம்படுத்த கலெக்டர் தலைமையில் நீர்வளத்துறை, மாநகராட்சி, நகர் வளர்ச்சி அலுவலகம், வனத்துறை, சூழலியல் அறிஞர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். கிருதுமால் நதியின் நீர்ப்பிடிப்பு கண்மாய்களாக விளங்கிய துவரிமான், மாடக்குளம், தென்கரை, சிந்தாமணி உள்ளிட்ட கண்மாய்கள் துார்வாரி அதன் உபரி நீர் கிருதுமால் நதி கால்வாய்க்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். துார் வாரிக்கொண்டே இருப்பது தீர்வாகாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை