உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

ஆண்டு விழா

மதுரை:விரகனுார் கோழிமேடு கே.எல்.என்., வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நடந்தது. செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முதல்வர் வேணி ஜோதிராம் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் மேயர் இந்திராணி பொன்வசந்த் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்.கவுரவ விருந்தினர்களாக முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, முன்னாள் எம்.எல்.ஏ.,எஸ்.எஸ்.சரவணன், என்.எம்.ஆர். சுப்பராமன் கல்லுாரி தலைவர் ஜவஹர்பாபு, சமூக ஆர்வலர் ஜவஹர்லால் பேசினர்.பள்ளி கவுன்சில் தலைவர் கணேஷ், துணைச் செயலாளர் கார்த்திக் மாணவர்களை பாராட்டினர். நிர்வாக அதிகாரி ராஜாபிரபு நன்றி கூறினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

சர்வதேச நோய் எதிர்ப்பு தினம்

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நுண்ணுயிரியல் துறை சார்பில் சர்வதேச நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடந்தது. மாணவி கார்த்தியாயினி வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பேராசிரியர் பாலகிருஷ்ணன், சித்த மருத்துவ பயிற்சி மருத்துவர் லாரின் சகாய லிடியா பேசினர். பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா நடத்தி பரிசு வழங்கப்பட்டது. தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராம சுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் ரோகிணி ஒருங்கிணைத்தார். மாணவி பூர்ணிமா நன்றி கூறினார்.

விருது வழங்கும் விழா

மதுரை: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரியில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. எம்.ஏ.வி.எம்.எம்., சபையின் துணைத் தலைவர் பெரியசேகரன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். முதல்வர் சிவாஜிகணேசன் வரவேற்றார். பொருளாளர் கோவிந்தராஜன், மதுரை கல்லுாரி இணைப் பேராசிரியர் தீனதயாளன் உட்பட பலர் பேசினர். மாணவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி விருது வழங்கினார். துணை முதல்வர் அசோக் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ