பள்ளி, கல்லுாரி செய்திகள்
மாணவிகளுக்கு பாராட்டுதிருமங்கலம்: பி.கே.என்., மெட்ரிக் பள்ளி சார்பில் குறுவட்ட அளவிலான போட்டிகள் பி.கே.என்., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தன. 28 பள்ளிகளைச் சேர்ந்த 980 மாணவர்கள் பங்கேற்றனர். திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் 9 தங்கம், 7 வெள்ளி உள்ளிட்ட 134 பரிசுகளை பெற்றனர். இந்த மாணவிகளுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அன்னபூரணம், உடற்கல்வி ஆசிரியர்கள் நவமணி, பாலின், ஷர்மிளா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பயிற்சி பட்டறைபெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வேதியியல் துறை சார்பில் மாநில அளவிலான இரண்டுநாள் பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி பிரிவு தலைவர் கதிரேசன் வரவேற்றார். அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் கிர்த்திகா ராணி, சரஸ்வதி நாராயணன் கல்லுாரி பேராசிரியர் தனலட்சுமி, ஓய்வு பெற்ற பேராசிரியர் மோதிலால், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் குபேந்திரன், விவேகானந்தா கல்லுாரி பேராசிரியர் சேர்வாரமுத்து பேசினர். போட்டித்தேர்வுகளில் மாணவர்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பேராசிரியர்கள் ஜெயசீலா, கவுரிசங்கர் ஒருங்கிணைத்தனர்.முப்பெரும் விழாகொட்டாம்பட்டி: கருங்காலக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம், மருத்துவக் கல்லுாரி படிப்பிற்கு தேர்வான மாணவி மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற நித்யாதேவிக்கு பாராட்டு விழா நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் முருகேசன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் உம்முல் குத்துாஸ் தலைமை வகித்தார். உறுப்பினர் பக்ருதீன் அலி முன்னிலை வகித்தார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியர் கண்மணி மாதாவுக்கு கல்வி செம்மல், உதவி தலைமை ஆசிரியர் முருகேசனுக்கு மாணவ நண்பர், மாணவி காளீஸ்வரிக்கு மாணவ செம்மல், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் நித்யாதேவிக்கு சீர்மிகு ஆசிரியர் விருதுகள் பள்ளி மேலாண்மை குழுவினரால் வழங்கப்பட்டது. சினிமா இயக்குநர் கண்மணி, வணிகர் சங்க தலைவர் ஜீவானந்தம், சமூக ஆர்வலர் செல்வராஜ் மற்றும் பள்ளி மேலாண்மை சூழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உறுப்பினர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.அறிவியல் கண்காட்சிமதுரை: அயன்பாப்பாகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது படைப்புகளை கண்காட்சியாக வைத்தனர். தலைமையாசிரியர் ஜோதி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அறிவியல் ஆசிரியர் அழகுஜோதி நன்றி கூறினார். கணித மன்ற தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் மங்களம் செய்திருந்தார். தொடர்ந்து நடந்த உணவுத் திருவிழாவில் சிறுதானிய உணவு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாணவிகள் சேர்க்கைமேலுார்: இ.மலம்பட்டி பகுதியில் நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவிகளை கணக்கெடுக்க சி.இ.ஓ., கார்த்திகா உத்தரவிட்டார். அதன் பேரில் பன்னிவீரன்பட்டியில் 12ம் வகுப்பு மாணவிகள் சரண்யா, ராஜேஸ்வரி, 11 ம் வகுப்பு மாணவி சாத்தம்மாள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராதது தெரியவந்தது. திட்ட அலுவலர் சரவணமுருகன் முன்னிலையில் இ. மலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியை ஈஸ்வரி மாணவிகளை சேர்த்துக் கொண்டனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சுதா ஒருங்கிணைப்பாளர் அங்குலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர் சதீஷ்குமார் செய்திருந்தனர்.ஆசிரியர் தின விழாமதுரை: செந்தமிழ்க் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாணவி ராஜமாலதி வரவேற்றார். மாணவி சிவசங்கரி பேசினார். பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு புத்தகம், மரக்கன்று வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேராசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன. முதல்வர் சாந்திதேவி, தமிழ்த்துறை தலைவர் பூங்கோதை, நுாலகர் பிருந்தா உள்ளிட்டோர் பேசினர். மாணவி மோனிகா தொகுத்து வழங்கினார். மாணவர்கள் முகமது இஸ்மாயில், யோகஸ்ரீ, அழகுபாண்டி, பாண்டிப்பிரியா, கிருத்திகா, சுஷ்மிதா, ராமச்சந்திரன், தங்கப்பாண்டி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.