மேலும் செய்திகள்
'குவாண்டம்' அறிவியல்: தொழில் நுட்ப கருத்தரங்கு
21-Feb-2025
மதுரை: மதுரை கல்லுாரி சுயநிதிப்பிரிவு இயற்பியல் துறையின் சார்பில் அறிவியல் தினவிழா கொண்டாடப்பட்டது.கல்லுாரி வாரிய பொருளாளர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், வாரிய உறுப்பினர் அமுதன் உட்பட பலர் பேசினர்.தியாகராஜர் கல்லுாரி பேராசிரியை தனலட்சுமி, 'பேட்டரி வாகனங்கள்' குறித்தும், பேராசிரியர் பிரேமாராணி அறிவியலில் இயற்பியலின் பங்கு, இயற்பியலால் சமூகத்தில் மாற்றம் குறித்தும் பேசினர். போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர்.பேராசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் பாண்டி, ரேவதி, செல்வி, ஈஸ்வரகோமதி, ராஜாசரவணகுமார், பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
21-Feb-2025