உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அறிவியல் பூங்கா பூமி பூஜை

அறிவியல் பூங்கா பூமி பூஜை

திருநகர்: திருநகர் அண்ணா பூங்கா ரூ. 2.57 கோடியில் அறிவியல் பூங்காவாக மாற்றும் பூமி பூஜை நடந்தது. மேயர் இந்திராணி பொன் வசந்த் அடிக்கல் நாட்டினார். இப்பூங்காவில் ஹாக்கி, கைப்பந்து, பூப்பந்து விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இதை நவீனப்படுத்துவதுடன் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் தொடர்புடைய சாதனங்கள் கற்றல் கருவிகளாக நிரந்தரமாக அமைக்கப்படுகின்றன.நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர்கள் சுவேதா, சிவா, உதவி கமிஷனர் பார்த்தசாரதி, நகர் பொறியாளர் ரூபன், செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி செயற் பொறியாளர் இந்திராதேவி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ