உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குளிர்பான கடைகளுக்கு சீல்

குளிர்பான கடைகளுக்கு சீல்

மதுரை : உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மதுரை புதுாரில் உள்ள 3 குளிர்பான கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் குளிர்பான விநியோகஸ்தர்கள் மற்றும் கடைகள் உட்பட 207 இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 32 லிட்டர் அளவுள்ள குளிர்பானங்கள் அழிக்கப்பட்டன. 10 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். 7 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. 26 ஆய்வு மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 3 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.தரமில்லாத உணவு மற்றும் குளிர்பானங்களை பயன்படுத்துவதை நுகர்வோர் தவிர்க்க வேண்டும். பேக்கிங் உணவுப்பொருள், குளிர்பானங்கள், ரோட்டு கடை, உணவகம், ஓட்டலில் சாப்பிடும் உணவின் தரம் மீது சந்தேகம் ஏற்பட்டால் உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். வாட்ஸ்ஆப்பில் (94440 42322) புகார் தெரிவிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை