உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விதை உற்பத்தி பயிற்சி

விதை உற்பத்தி பயிற்சி

மதுரை: வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் இளையோருக்கு விதைப்பண்ணை அமைப்பது, விதை உற்பத்தி குறித்த 6 நாட்கள் இலவச தொழில்நுட்ப பயிற்சி தொடங்கியது. உதவி இயக்குநர் மயில் வரவேற்றார். துணை இயக்குநர் அமுதன், நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். இணை இயக்குநர் சுப்புராஜ் பேசுகையில், விதை உற்பத்தி செய்து சான்று பெற்ற விதைகளை விற்கும் போது தானியங்களை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.இனத்துாய்மையுள்ள கலப்படமில்லாத விதைகளையும் உருவாக்க முடியும்'' என்றார். நெல், சிறுதானியங்கள், பயறு, எண்ணெய் வித்துகள், தோட்டக்கலை பயிர்களில் விதைச்சான்று பெறும் முறை குறித்து உதவி இயக்குநர் சிங்காரலீனா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை