| ADDED : ஆக 14, 2024 12:57 AM
மதுரை : திருப்பரங்குன்றம் கருவேலம்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. விதை உற்பத்தி, சான்று பெறுவது, விதைப்பண்ணை பதிவுகட்டணம், பருவத்திற்கேற்ற ரகங்கள் குறித்து விதைச்சான்று உதவி இயக்குநர் சிங்காரலீனா பேசினார். விதைப்பண்ணை பதிவு செய்வது முதல் விதை அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்களை விதைச்சான்று அலுவலர் நித்யா, வேளாண் அலுவலர் நவமணி விஜயபாரதி விளக்கினர்.முன்னோடி விவசாயி கிருஷ்ணன் அங்ககச்சான்று பெறுவதன் மூலம் கூடுதல் லாபம் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். உதவி விதை அலுவலர் அழகேசன், வட்டாரத் தொழில் நுட்பமேலாளர் லதா ஏற்பாடுகளை செய்தனர்.