உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூட்டுறவு தேர்தலை தி.மு.க., அரசு ஏன் நடத்தவில்லை செல்லுார் ராஜூ கேள்வி

கூட்டுறவு தேர்தலை தி.மு.க., அரசு ஏன் நடத்தவில்லை செல்லுார் ராஜூ கேள்வி

மதுரை: ''பத்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் 28 விருதுகளை கூட்டுறவுத் துறை பெற்றது. இரண்டு முறை கூட்டுறவு தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது தி.மு.க., அரசால் ஏன் நடத்தமுடியவில்லை'' என முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் ராஜூ கேள்வி எழுப்பினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் 33,377 ரேஷன் கடையில் உள்ளன. மாதம்தோறும் 20 கிலோ அரிசி என்ற திட்டத்தை 2011ல் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். நம்மை காட்டிலும் அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கூட இது போன்ற திட்டம் கிடையாது. பழனிசாமி ஆட்சியில் ரூ.2500 பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் 28 விருதை கூட்டுறவுத் துறை பெற்றுள்ளது. இருமுறை ஜனாதிபதி விருதும் பெறப்பட்டது. இரண்டு முறை கூட்டுறவு தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்தது. தற்போது கூட்டுறவு தேர்தலை தி.மு.க., அரசு ஏன் நடத்தவில்லை. இந்த மூன்றாண்டுகளில் கூட்டுறவு துறை சிக்கி சீரழிந்து வருகிறது. ரேஷன் கடைகளுக்கு வாடகை, மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு ஆண்டுதோறும் அரசு மானியமாக வழங்கும். இந்த மானியத்தால் தான் சமாளிக்க முடியும். ஆனால் இந்த மானியங்கள் குறித்த காலத்தில் வரவில்லை. இதனால் சங்கங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி திணறி வருகின்றன. இன்றைக்கு அரசு பணத்தில் வெளிநாடு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினும், அரசு பணத்தில் கார் ரேஸ் நடத்திய உதயநிதியும் மக்களின் வரிப்பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வருகிறார்கள். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் இந்த கூட்டுறவு துறைக்கு உரிய நிதி வழங்க முன்வர வேண்டும். இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக சட்டசபை தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை