போக்சோ வழக்கில் தண்டனை
மதுரை: திருப்பூரை சேர்ந்தவர் சரவணன் 29. மதுரையிலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். ஒரு சிறுமியுடன் பழகினார். திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தார். தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்தனர்.போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி முத்துக்குமாரவேல்: சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.