உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 100 பேருக்கு தையல் மிஷின்

100 பேருக்கு தையல் மிஷின்

மதுரை, : சமூகநலத்துறை சார்பில் பெண்கள் மேம்பாட்டுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். 100 பேருக்கு வழங்க தகுதித் தேர்வு அடிப்படையில் பயனாளிகள் தேர்வு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமையில் துறை அலுவலர் காந்திமதி உட்பட பலர் பங்கேற்றனர். தையல் இயந்திரத்தில் துணிகளை தைத்து காட்டியவர்களை 5 பேர் கொண்ட நடுவர் குழு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்தது. இத்தேர்வில் 180க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்