மேலும் செய்திகள்
ஆவின் நடத்திய கிடா விருந்து
14-Aug-2024
'ஆவின் பெண் ஊழியர்களுக்கு ஓவர் கோட்'
22-Aug-2024
மதுரை: மதுரை ஆவினில் 8 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போன சம்பவத்தில் தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கீழ்நிலை ஊழியர்கள் 2 பேரை மட்டும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இம்மாதம் 2வது வாரத்தில் டெப்போக்களுக்கு வினியோகிக்கப்பட்ட ரூ.10 மதிப்புள்ள 200 மில்லி லிட்டர் கவ் மில்க், ரூ.22க்கு விற்பனையாகும் அரை லிட்டர் டிலைட் பால் பாக்கெட்டுகள் பல இடங்களில் கெட்டுப்போயிருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து முகவர்களிடம் பால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அவர்களுக்கு ஆவின் சார்பில் மாற்றுப்பால் வழங்கப்பட்டது.இதற்கு காரணம், உற்பத்தியாளரிடமிருந்து கொள்முதல் செய்த மொத்த பால், ஆவின் மெயின் அலுவலகத்தில் பதப்படுத்தி மைனஸ் டிகிரியில் குளிரூட்டப்பட்டு சைலோ டேங்குகளில் இரவு முழுவதும் ஸ்டோரேஜ் வைக்கப்பட்டபோது ஒரு டேங்கரில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக பால் கெட்டுப்போனதாக தகவல் வெளியானது.இச்சம்பவம் தொடர்பாக கீழ்நிலையில் உள்ள இரண்டு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் 'எஸ்கேப்' ஆனது தெரியவந்துள்ளது.ஆவின் ஊழியர்கள் கூறியதாவது: டைரி, இன்ஜினியரிங், லேப் என மூன்று பிரிவுகளிலும் பொறுப்பு அலுவலர்களுக்குள் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. இதனால் தான் 8 ஆயிரம் லிட்டருக்கும் மேல் பால் கெட்டுப்போய் வீணாக கொட்டப்பட்டது. இதனால் ரூ.3 லட்சத்திற்கும் மேல் ஆவினுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை தவறு செய்த அலுவலர்களிடம் வசூலிக்க வேண்டும்.இந்த நடைமுறை அமலில் இருந்தும் பொறுப்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை இல்லை. இதனால் தவறுக்கு காரணமான அலுவலர்களை விட்டுவிட்டு, கீழ்நிலை ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது சரியா. தவறு செய்தது ஒரு தரப்பு, தண்டனை மட்டும் வேறு நபர்களுக்கா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
14-Aug-2024
22-Aug-2024