உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாடுவிழுதல் விழா

பாடுவிழுதல் விழா

அலங்காநல்லுார், : முடுவார்பட்டி மற்றும் ஆதனுாரில் காமாட்சி அம்மன், காஞ்சரடி,கழுவடி சுவாமிகள் கோயில் உற்ஸவம் மே 30 துவங்கியது. சால்வார்பட்டி அரண்மனையாரிடம் கம்பு வாங்கியும், ஆதனுார் காமாட்சி அம்மன் கோயிலில் பெட்டி அழைத்து வந்தனர். மரங்குனி ஆற்றுக்கு சென்று சாமியாடிகள் தீர்த்தமாடினர். காரான்கள அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் ஒரு பட்டசாமியாடி பாடு விழுதல் துவங்கியது. ஜூன் 7 சடச்சியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு அம்மன் கரகம் கழுவடி கோயிலுக்கு அழைத்து வந்து சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். கிடா வெட்டி கழுவடி கோயில் முன் உள்ள படுகளத்தில் 9 சாமியாடிகள் பாடு விழுதல் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை