உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

மதுரை : ஜூலை 18ம் தேதி 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படுவதையொட்டி, அனைத்து பள்ளிகளிலும் அரசு சார்பில் 6 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 9 ம்தேதி மதுரை தல்லாகுளம் செங்குந்தர் உறவின்முறை உயர்நிலைப் பள்ளியில் நடக்கிறது.கட்டுரைப் போட்டிக்கு 'ஆட்சித் தமிழ்' என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டிக்கு, 'குமரி தந்தை மார்ஷல் நேசமணி', தென்னாட்டு பெர்னட்ஷா பேரறிஞர் அண்ணா', முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி' ஆகிய தலைப்புகளிலும் போட்டி நடைபெறும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.முதல் பரிசு பெறுபவர் ஜூலை 12 ல் சென்னையில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்க பரிந்துரைக்கப்படுவர் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ