மேலும் செய்திகள்
வாழையில் பழுப்பால் விவசாயிகள் தவிப்பு
2 minutes ago
74 புகார்களுக்கு தீர்வு
05-Oct-2025
கார் விபத்தில் மூதாட்டி பலி
05-Oct-2025
மாநில கிரிக்கெட் போட்டி
05-Oct-2025
இன்றைய நிகழ்ச்சி / அக். 5 க்குரியது
05-Oct-2025
மதுரை : பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள்மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆக.,25க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கூறியதாவது: 27 விளையாட்டுகள் 53 வகையாக மாவட்ட, மண்டல, மாநில அளவில்செப்., அக்டோபரில் நடத்தப்படுகிறது. 12 முதல் 19 வயது பள்ளி மாணவர்கள், 17 முதல் 25 வயது கல்லுாரி மாணவர்களுக்கு தடகளம், இறகுபந்து, கூடைபந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல் பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், டேபிள்டென்னிஸ், வாலிபால், ஹேண்ட்பால், கேரம், செஸ், கோகோ போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், இறகுபந்து, வீல்சேர் டேபிள் டென்னிஸ், பார்வைத்திறன், செவித்திறன், மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், எறிபந்து, கபடி போட்டிகளுக்கு வயது வரம்பில்லை.15 முதல் 35 வயதுக்குஉட்பட்ட பொதுமக்கள் பிரிவில் தடகளம், இறகுபந்து, கிரிக்கெட், கபடி, வாலிபால், கால்பந்து, கேரம், சிலம்ப போட்டிகள் நடக்கின்றன. அரசு ஊழியர்கள் தடகளம், இறகுபந்து, செஸ், கபடி, வாலிபால், கேரம் போட்டியில் பங்கேற்க வயது வரம்பில்லை.போட்டியில் பங்கேற்க விரும்பும் தனிநபர் மற்றும் குழுவினர் www.sdat.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்தால் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும் என்றார்.
2 minutes ago
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025