உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில கூடைப்பந்து சென்னை முதலிடம்

மாநில கூடைப்பந்து சென்னை முதலிடம்

சோழவந்தான், : சோழவந்தானில் கூடை பந்தாட்ட கழகம் சார்பில் மாநில போட்டி நடந்தது. லயன்ஸ் கிளப் தலைவர் மருதுபாண்டியன் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். கூடை பந்தாட்ட கழக நிர்வாகி சந்தோஷ் வரவேற்றார். மூன்று நாட்கள் நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. நடுவர்களாக ராதா, ஜெகதீஷ் இருந்தனர். சென்னை ஜேப்பியார் அணி, வத்தலகுண்டு யங் ஸ்டார், வடமதுரை சேலஞ்சர் அணிகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை