உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மானியத்தில் பழச்செடிகள்

மானியத்தில் பழச்செடிகள்

மதுரை : தோட்டக்கலைத் துறையின் கீழ் மானிய விலையில் பழச்செடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா கூறியதாவது: முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் ரூ.45 க்கு வாழைக்கன்று, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை கன்றுகள் தொகுப்பாக வழங்கப்படும். இதற்காக ரூ.13.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 75 சதவீத மானியத்தில் சப்போட்டா, கொய்யா, பப்பாளி, நெல்லி, சீதாப்பழ கன்றுகள் ரூ.150க்கு வழங்கப்படுகிறது. இதற்கென ரூ.25.6 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு தொகுப்புதான் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் உழவன் அலைபேசி செயலியில் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை