உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விதைப்பண்ணைகள் ஆய்வு

விதைப்பண்ணைகள் ஆய்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் விதைப்பண்ணை, அங்ககப்பண்ணைகளை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இணை இயக்குநர் (பொறுப்பு) ஜோதிலட்சுமி ஆய்வுசெய்தார்.மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் சிங்கார லீனா, விதைச்சான்று அலுவலர்கள் கண்ணன், சந்தீப் சவுத்ரி, அங்ககச்சான்று ஆய்வாளர் (பொறுப்பு) நித்யா உடன் சென்றனர். அச்சம்பத்து விவசாயி ரமணனின் கோ 55 நெல் ரக ஆதார நிலை விதை உற்பத்தி விதைப்பண்ணை தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர். ஒரு விதைப்பண்ணையிலிருந்து அடுத்த விதைப்பண்ணைக்கு இடையே குறைந்தபட்சம் 3 மீட்டர் பயிர் விலகு துாரம் இருந்தால் வேறு ரக கலப்பு ஏற்படாது என்று அறிவுறுத்தினர். கலவன் நீக்குதல், பூச்சி நோய் மேலாண்மை, புதிய தொழில்நுட்பம் குறித்து விளக்கப்பட்டது. வலையப்பட்டி விவசாயி அருண் விஜயகுமாரின் இயற்கை தோட்டக்கலை பண்ணையை பார்வையிட்டனர். அங்கக பண்ணையில் ஆடு, மாடுகளை வளர்க்கும் போது அவற்றுக்கான நோய் மேலாண்மையும் அங்கக முறைப்படியே மேற்கொள்ள வேண்டும் என்று விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி