உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழ்நாடு தினம் போட்டி மாணவர்களுக்கு பரிசுகள்

தமிழ்நாடு தினம் போட்டி மாணவர்களுக்கு பரிசுகள்

மதுரை: தமிழ்நாடு தினத்தையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மதுரையில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிநடந்தது.ஆசிரியர்கள் டி.அய்யன்கோட்டை பள்ளி சதீஷ்குமார், கொண்டையம்பட்டி முத்துலட்சுமி, முடுவார்பட்டி இசக்கிமுத்து, செங்கப்படை பிச்சை, அலங்காநல்லுார் சியாமளா நடுவர்களாக பங்கேற்றனர். கட்டுரைப் போட்டியில், தெற்குவாசல் நாடார் பள்ளி மாணவி ராஜஹர்சினி முதல் பரிசு, அலங்காநல்லுார் அரசு பள்ளி மாணவி ஹர்சிதா 2ம் பரிசு, தியாகராஜர் நன்முறை பள்ளி மாணவர் சக்திகணேஷ் 3ம் பரிசும் வென்றனர்.பேச்சுப் போட்டியில் தோப்பூர் அரசு பள்ளி மாணவி தீப்தி முதல் பரிசு, ஞானஒளிவுபுரம் பிரிட்டோ பள்ளி மாணவர் சுதாநந்தன் 2ம் பரிசு, தியாகராஜர் நன்முறை பள்ளி மாணவர் சாரதி 3ம் பரிசும் வென்றனர். முதல் 3 இடங்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் சுசீலா ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ