உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழ் நகர் குடியிருப்போர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ் நகர் குடியிருப்போர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை; மதுரை புதுார் காந்திபுரம் விரிவாக்கம் தமிழ்நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர் இப்ராகிம்ஷா. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழ் நகரில் பாதாளச் சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்கவில்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி விவேக்குமார் சிங்: அதிகாரிக்கு மனு அனுப்பினால் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதற்குப் பதிலாக, தகுதி அடிப்படையில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. பரிசீலிக்காமல் இருப்பது கடமையை மீறுவதாகும். மனுதாரரின் மனுவை மாநகராட்சி கமிஷனர் பரிசீலித்து 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை