ஆசிரியர் பாதுகாப்பு காப்பீடு நிகழ்ச்சி
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் நேஷனல் ஆசிரியர் பாதுகாப்பு காப்பீடு நிகழ்ச்சி முதல்வர் சுஜாதா தலைமையில் நடந்தது.டீன் பிரியா வரவேற்றார். நேஷனல் ஆசிரியர் பாதுகாப்பு காப்பீடு நிறுவன முதுநிலை வணிக மேலாளர் சரவணகுமார் காப்பீடு மூலம் ஆசிரியர்கள் பெறும் பயன்களை விளக்கினார். முதன்மை மண்டல மேலாளர் விவேகானந்தன், மண்டல மேலாளர் சிபி, ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரி சீனிவாசன் பங்கேற்றனர். துணை முதல்வர் குருபாஸ்கர் நன்றி கூறினார்.